Connect with us

Sports

குரூப் 1 பிரிவில் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன

Published

on

T20 உலகக் கிண்ண தொடரின்; நேற்றைய சுப்பர் 12 போட்டியில் இங்கிலாந்து அணியை 10 ஓட்டங்கள் வித்தியாசததில் வீழ்த்தினாலும், தென்னாபிரிக்கா அணிக்கு அரையிறுதி வாய்ப்பை பெற முடியவில்லை.

இதேவேளை T20 உலக கிண்ண குரூப் 1 பிரிவில் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.

இங்கிலாந்து, அவுஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் தாம் விளையாடிய 5 போட்டிகளில் தலா 4 வெற்றியைப் பெற்று 8 புள்ளிகளுடன் சமநிலை வகித்தன.

ஆனால், ஓட்ட எண்ணிக்கை அடிப்படையில் இங்கிலாந்து முதலிடத்திலும், அவுஸ்திரேலியா இரண்டாவது இடத்தையும் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறின.

ஏற்கனவே, இந்த குழுவில் இடம்பெற்றிpருந்த இலங்கை, மேற்கிந்திய தீவுகள், பங்காளதேஸ் ஆகிய அணிகள் அரையிறுதி வாய்ப்பை இழந்துவிட்டன.

இதேவேளை இன்று 3.30 க்கு இடம்பெறும் போட்டியில் ஆப்கானிஸ்தான் – நியூசிலாந்து அணிகளும், இரவு 7.30 க்கு இடம்பெறும் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளும் மோதுகின்றன.