Connect with us

உள்நாட்டு செய்தி

துணிவுடனும், தெளிவுடனும் போராட தயார்- அனுசா

Published

on

மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக தலைவர் பெ.சந்திரசேகரனின் புதல்வி சட்டத்தரணி அனுசா சந்திரசேகரன் ‘சந்திரசேகரன் மக்கள் முன்னணி’ என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

அவர் அண்மையில் மலையக மக்கள் முன்னணியில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்த நிலையில் கடந்த பொதுத் தேர்தலின் போது தன்iனை நம்பி வாக்களித்த 17 ஆயிரத்து 107 வாக்காளர்களுக்கான உபகாரமாகவும் ஒட்டு மொத்த மலையகத்திற்கு சேவை செய்யவுமே இந்த புதிய கட்சியை ஆரம்பிப்பதாக அனுசா அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்

“காலத்திற்கேற்ற சமூக செயற்பாடுகளையும் அதற்கான நேர்மையான கருத்துக்களையும் பதிவு செய்யாத எவராலும் மக்கள் செயற்பாட்டாளராக தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளவே முடியாது என்று சட்டத்தரணி அனுஷா சந்திரசேகரன் தெரிவித்தார்.

சந்திரசேகரன் மக்கள் முன்னணி, அண்ணா சந்திரசேகரன் தொழிலாளர் முன்னணிஇ ஆகிய அமைப்புகளின் செயற்பாட்டு நோக்கம் சம்பந்தமாக அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கும் போது.

கடந்த பொது தேர்தலில் எனக்கு நேரடியாக வாக்களித்த பதினேழாயிரத்துக்கும் அதிகமானோர் வாக்களிக்க முயற்சித்த ஐயாயிரத்துக்கும் அதிகமானோர் கொடுத்த ஆதரவினை தேர்தலோடு நான் மட்டுப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை இதற்கும் சமமாக இத் தொகுதியில் வாக்காளர்கள் அல்லாத நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் வழங்கிய ஆதரவின் வெளிப்பாடே இது.

இதனை எனக்கு வழங்கப்பட்ட அரசியல் அங்கீகாரமாக எடுத்துக்கொண்டு என் தந்தை வழியில் எனது மக்கள் சேவையை ஆரம்பித்துள்ளேன்.

நான் எதிர்ப்பார்த்ததை விடவும் வஞ்சகம் நிறைந்த களமாக இது இருந்தாலும் கூட அதனை வென்று சாதிக்கும் மனோ தைரியத்தை என் தந்தை எனக்கு தினமும் வழங்குகிறார்.

கற்றவர்கள் அரசியலுக்கு வருவதில்லை அல்லது தகுதியானவர்களுக்கு மக்கள் அங்கீகாரம் வழங்குவதில்லை என்ற பிழையான குற்றச்சாட்டுக்களுக்கு அப்பால் இளைஞர்கள் மத்தியில் இருக்கும் அரசியல் தாகத்தை நான் தெளிவாகப்புரிந்துக் கொண்டுள்ளேன்.

அரத்தமுள்ள கருத்துக்கள் அவர்கள் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் கூறப்பட்டால் நிச்சயமாக இளைஞர்களை ஓரணி திரட்ட முடியும் இதனை வரலாறு நிருபித்துள்ளது.
தேர்தலில் போட்டியிட்டு வென்றோம் தோற்றோம் இனி அடுத்த தேர்தல் என்றில்லாமல் தேசிய அரசியலில் எமது சமூகத்தினை இணைப்பதற்கு ஏற்பட்டுள்ள இடைவெளியை நாம் நிரப்ப வேண்டும்.

பெருந்தோட்ட துறைசார்ந்த இதுவரை அரசாங்கத்தின் பார்வையே படாத எம் தொழிலாளர்களுக்காக மட்டுமல்லாது தொழிலாளர்கள் அல்லாத எமது மலையக உறவுகளையும் இணைத்துக் கொண்டு பயணளிப்பதற்காகவே இவ் இரு அமைப்புகளையும் அமைத்துள்ளேன்.

எல்லா பாகுபாடுகளுக்கும் அப்பால் மலையகம் என்ற அடித்தளத்தில் இருந்து ஏனைய அனைத்து முற்போக்கு சக்திகளுடனும் இணைந்து என் தந்தை எவ்வாறு அரசியல் பிரளயத்தினை ஏற்படுத்தினாரே அதே வழியில் எனது செயற்பாடுகளும் அமையும்.

ஆகவே கபடத்தன தலைமையில் வெறுப்புற்றுள்ள ம.ம.மு யின் அங்கத்தவர்கள் மட்டுமின்றி என் தந்தையின் ஆதரவாளர்கள் என்பதால் ஒதுக்கப்பட்டவர்கள். அல்லது ஒதுங்கி இருப்பவர்கள் அனைவரும் என்னோடு இணைந்து செயற்படுமாறு அழைப்பு விடுக்கிறேன்.

அதே போன்று எம் சமூகத்தின் மாற்றத்துக்காக உணர்வோடு செயற்படும் அனைத்து சக்திகளும் எனக்கு ஆதரவு தருமாறு அழைக்கின்றேன். துணிவுடனும் தெளிவுடனும் செயற்பட்டால் மாற்ற முடியாது ஒன்றுமே இல்லை என உறுதி செய்வோம்” என தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *