Connect with us

Sports

பந்துல வர்ணபுர மாரடைப்பு காரணமாக காலமாகியுள்ளார்

Published

on

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முதலாவது தலைவர் பந்துல வர்ணபுர மாரடைப்பு காரணமாக காலமாகியுள்ளார்.

கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் காலமானார்.

சுகயீனம் காரணமாக தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சைப்பெற்றுவந்த நிலையில் தமது 68 ஆவது வயதில் அவர் இன்று காலமானதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிரேஷ்ட கிரிக்கட் வீரர் பந்துலவர்ணபுர மாரடைப்பு காரணமாக கடந்த 6 ஆம் திகதி கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இதேவேளை அவர் இலங்கை அணிக்காக 4 டெஸ்ட் மற்றும் 12 ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் பங்கேற்றுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *