Connect with us

உள்நாட்டு செய்தி

எதிர்வரும் 21 முதல் ரயில் சேவைகள்

Published

on

மாகாணங்களுக்கு இடையிலான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டால் எதிர்வரும் வியாழக்கிழமை முதல் ரயில் சேவைகள் ஆரம்பிக்கபடும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், எதிர்வரும் வியாழக்கிழமை முதல் 128 முதல் 130 வரையான ரயில் சேவைகள் நாளாந்தம் முன்னெடுக்கப்படும் என ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

அத்துடன், மாகாணத்துக்குள் மற்றும் மாகாணங்களுக்கு இடையிலான ரயில் சேவைகளும் ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கண்டி, மாத்தறை, காலி, பெலியத்த மற்றும் சிலாபம் ரயில் நிலையங்களிலிருந்து ரயில் சேவைகளை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கண்டியிலிருந்து புறப்படும் ரயில் ரம்புக்கனை வரை குறைவான வேகத்தில் சேவையினை முன்னெடுப்பதுடன் , ரம்புக்கனை முதல் தெமட்டகொட வரை தொடர்ச்சியாக செயற்படுத்துவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.