உலகம்
பாகிஸ்தானின் தெற்கே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : 20 பேர் உயிரிழந்துள்ளனர்
பாகிஸ்தானின் தெற்கே இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் நாட்டின் தெற்கே ஹர்னாயிலிருந்து வடகிழக்கே 14 கி.மீ. தொலைவில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சமடைந்தனர்.
இந்நிலையில், பேரிடர் மேலாண்மை ஆணைய இயக்குனர் ஜெனரல் நசீர் கூறும்போது, பாகிஸ்தானின் தெற்கே இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு 20 பேர் உயிரிழந்து உள்ளனர். 200 பேர் காயமடைந்து உள்ளனர் என கூறியுள்ளார்.