உலகம்
ஸ்பெயின் லா பல்மா தீவில், எரிமலை சீற்றம்
ஸ்பெயின் லா பல்மா என்ற தீவில் உள்ள ஹம்ரி விஜா என்ற எரிமலையில் நேற்று திடீரென சீற்றம் ஏற்பட்டது.
கரும்புகையுடன் எரிமலை வெடித்து சிதறி எரிமலை குழம்பு வெளியேறத்தொடங்கியது.
இதனால், மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்தனர்.
எரிமலை சீற்றம் ஏற்பட்ட பகுதியில் இருந்து இதுவரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
எந்த நேரத்திலும் எரிமலை வெடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதனால், சிறப்பு மீட்புப்படை அங்கு அனுப்பப்பட்டுள்ள ர் .
மேற்கு ஆப்பிரிக்க நாடான மொராக்கோ அருகே கேனரி தீவு உள்ளது.
இந்த தீவு ஸ்பெயின் நாட்டுக்கு சொந்தமானது.
இங்கு 80 ஆயிரம் மக்கள் வசிக்கிறார்கள்.