உலகம்
இத்தாலியில் கொரோனா தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது
இத்தாலியில் அனைத்து ஊழியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
“green pass” எனப்படும் குறித்த சான்றிதலில் தடுப்பூசி ஏற்றியமை, தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை என்பதற்கான ஆதாரம் அல்லது தொற்றிலிருந்து மீண்டு வருவதற்கான ஆதாரங்கள் உள்ளடங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் இவ்வாறான நடைமுறையை அறிமுகப்படுத்திய முதலாவது நாடாக இத்தாலி பதிவாகியுள்ளது.
குறித்த அட்டையின்றி எவரும் தொழிலுக்கு செல்ல முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய நடைமுறை எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளது.