Connect with us

உலகம்

“சீனாவில் அறிகுறி இல்லாத கொரோனா தொற்று”

Published

on

சீனாவில் கடந்த ஓரிரு மாதங்களாக மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

உலகில் முதன் முதலாக சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

இந்த நிலையில் சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் அறிகுறி இல்லாத தொற்று பாதிப்புகளை உறுதி செய்யப்பட்ட பாதிப்பாக சீன சுகாதாரத்துறை அறிவிப்பதில்லை.

அந்த வகையில் 21 பேருக்கு அறிகுறி இல்லாத கொரோனா தொற்று உறுதியாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது. 

இந்த புதிய பாதிப்புகளின் மூலம் சீனாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 95,153 ஆக உயர்ந்துள்ளது.

அதே சமயம் கொரோனாவால் அங்கு இதுவரை 4,636  பேர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.