உள்நாட்டு செய்தி
மேலும் ஒரு தொகை பைசர் தடுப்பூசிகள்

இலங்கை மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட மேலும் ஒரு தொகை பைசர் தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
அதன்படி, 92,430 பைசர் தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
நெதர்லாந்தில் இருந்து கட்டார் தோஹா நகருக்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து கட்டுநாயக்க விமான நிலையமூடாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
குறித்த தடுப்பூசிகள் இன்று அதிகாலை 1.45 அளவில் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டதாக விமான நிலைய கடமைநேர பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.