உள்நாட்டு செய்தி
கோதுமை மாவின் விலையினை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை
நாட்டில் கோதுமை மாவின் விலையினை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
கோதுமை மா நிறுவனங்கள் தன்னிச்சையான தீர்மானங்கள் மூலம் விலை அதிகரிப்பினை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.
கோதுமை மாவின் விலை 12 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பிரிமா நிறுவனம் அறிவித்துள்ள நிலையில் நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை விலை அதிகரிப்பு விடயம் தொடர்பிலான தீர்மானத்தை பிரிமா நிறுவனம் தங்களுக்கு அறிவிக்கவில்லை எனவும் நுகர்வோர் விவகார அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் அனுமதியின்றி கோதுமை மாவின் விலையினை அதிகரித்துள்ள நிறுவனத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது