Connect with us

Sports

ஜப்னா அணியில் விளையாடவுள்ள மேற்கிந்திய வீரர்

Published

on

லங்கா பிரிமியர் லீக் (LPL) தொடரின் ஜப்னா ஸ்டேலியன்ஸ் (Jaffna Stallions) அணிக்காக மேற்கிந்திய தீவுகள் அணியின் விக்கெட் காப்பாளர் ஜோன்சன் சார்ல்ஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஜப்னா ஸ்டேலியன் அணி விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிப்பட்ட காரணங்களுக்காக அணியில் இருந்து விலகிய ரவி போப்பாராவுக்கு பதிலாக 6 வது வெளிநாட்டு வீரராக ஜோன்சன் சார்ளஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஜப்னா ஸ்டேலியன் அணியில் ஜோன்சன் சார்ள்ஸ்சுடன், பாகிஸ்தானின் சொஹிப் மலிக், உஸ்மன் சிங்வாரி, தென்னாப்பிரிக்காவின் க்ய்ல் அபோட் மற்றும் இங்கிலாந்து அணியின் டொம் மொரிஸ் ஆகிய வெளிநாட்டு வீரர்கள் விளையாடவுள்ளனர்.