Connect with us

Sports

இங்கிலாந்து பந்து வீச்சாளர்களால் தவிடு பொடியான இந்தியா – 3 ஆவது டெஸ்ட்டில் இங்கிலாந்து இனிங்ஸ் வெற்றி

Published

on

இந்தியாவுக்கு எதிரான 3 ஆவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து ஒரு இனிங்ஸ் மற்றும் 76 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது.

இதற்கமைய இரு அணிகளுக்கும் இடையிலான 5 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று சமநிலையில் உள்ளன.

முதல் இன்னிங்சில் 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்த இந்தியா 78 ஓட்டங்களுக்குள் சுருண்டது.

2 ஆவது இன்னிங்சில் 64 ஓட்டங்களுக்குள் கடைசி 8 விக்கெட்டுகளை இழந்தமை குறிப்பிடதக்கது.

இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி மழையால் பாதிக்கப்பட்ட நிலையில் இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி வெற்றிப் பெற்றது.

இந்த நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் செப்டெம்பர் 2 ஆம் திகதி ஓவல் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.