Connect with us

உலகம்

உலகம் முழுவதும் இதுவரை 43.93 இ லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்

Published

on

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 18.76 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

மேலும் இதுவரை 43.93 இ லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பரவியவர்களில் 1.73 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிகிச்சை பெறுபவர்களில் 1.07 இலட்சத்துக்கு மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 20.93 கோடியைக் கடந்துள்ளது. 

இதேவேளை, இலங்கையில் நேற்று (17) 171 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,434 ஆக அதிகரித்துள்ளது.

மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 365,629 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா, பிரான்ஸ் ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.