உள்நாட்டு செய்தி
இன்று நள்ளிரவு முதல் மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடுகள்

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் நாடளாவிய ரீதியில் மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடுகள் கடுமையாக அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
ஜனாதிபதி மற்றும் கொரோனா ஒழிப்பு செயலணியுடன் இன்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாடளாவிய ரீதியில் அத்தியாவசிய தேவைகளை தவிர்ந்த ஏனைய எந்தவொரு போக்குவரத்துக்களும் இடம்பெறாது எனவும் இராணுவுத்தளபதி குறிப்பிட்டார்.
மேலும், சுகாதாரம், சுற்றுலா, விவசாயம், ஆடைத் தொழிற்சாலைகள், மற்றும் துறைமுகங்களில் சேவையாற்றுபவர்களுக்கு மாகாணங்களுக்கிடையில் பயணிக்க முடியும்.
அது மாத்திரமின்றில் அத்தியாவசிய தேவைகள் நிமித்தம் பயணிப்பவர்களுக்கும் மாகாணங்களுக்கிடையில் பயணிக்க அனுமதி வழங்கப்ப