Connect with us

உலகம்

5 கோடியே 65 இலட்சம் பேருக்கு கொரோனா

Published

on

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 5 கோடியே 65 இலட்சமாக அதிகரித்துள்ளது.

குறிப்பாக அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1 இலட்சத்து 69 ஆயிரத்து 681 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அதேபோல் இந்திய அரசு நேற்று (18) வெளியிட்ட தகவலில் 24 மணி நேரத்தில் 38 ஆயிரத்து 617 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் பிரேசிலில் 35 ஆயிரத்து 645 பேருக்கும், இத்தாலியில் 34 ஆயிரத்து 283 பேருக்கும் புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 5 கோடியே 65 லட்சத்து 40 ஆயிரத்து 752 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 1 கோடியே 58 இலட்சத்து 70 ஆயிரத்து 617 பேர் சிகிச்சை பெற்று வருகிறனர்.

சிகிச்சை பெறுபவர்களில் 1 இலட்சத்து 1 ஆயிரத்து 100 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

வைரஸ் பாதிப்பில் இருந்து 3 கோடியே 90 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளது .

ஆனாலும், கொரோனாவால் இதுவரை 13 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்

அமெரிக்கா – 1,18,69,289

இந்தியா – 89,12,908 

பிரேசில் – 59,47,403

பிரான்ஸ் – 20,65,138

ரஷியா – 19,91,998