உலகம்
பிரிட்டனில் பொது இடங்களில் முகக் கவசம் அணிய வேண்டியது கட்டாயமாக இருக்காது
பிரிட்டனில் கரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டப் பிறகு, பொது இடங்களில் மக்கள் முகக் கவசம் அணிய வேண்டியது கட்டாயமாக இருக்காது என்று அந்த நாட்டு வீட்டு வசதித் துறை அமைச்சா் ராபா்ட் ஜென்ரிக் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் கூறுகையில், வரும் 19 ஆம் திகதி முதல் கொரோனா கட்டுப்பாடுகளை சட்டப்பூா்வமாக நீக்கத் தயாராகி வருகிறோம். அதற்குப் பிறகு, பொது இடங்களில் மக்கள் முகக் கவசம் அணிய வேண்டியது கட்டாயமில்லை. ஆனால், நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்காக அவா்கள் சுயமாக பொறுப்பேற்று முகக் கவசம் அணிந்துகொள்ள வேண்டும்.
கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் வெற்றி பெற்றதால்தான் கட்டுப்பாடுகளைத் தளா்த்தும் நிலை ஏற்பட்டுள்ளது என்றாா் அவா்.