உள்நாட்டு செய்தி
செப்டேம்பரில் நாடு முழுமையாக திறக்கப்படுமா?

தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை விரைவாக முன்னெடுத்தால் எதிர்வரும் செப்டேம்பர் மாத அளவில் நாட்டை முற்றாக திறக்க முடியும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற 99 ஆவது சர்வதேச கூட்டுறவு தின வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைக் கூறினார்.
நாட்டை விரைவில் திறக்காவிடின் பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டுச் செல்ல முடியாது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.