உள்நாட்டு செய்தி
தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை மீறி செயல்பட்ட குற்றச்சாட்டில் இதுவரை 41, 914 பேர் கைது
தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை மீறி செயல்பட்டதான குற்றச்சாட்டில் நேற்று (22) காலை ஆறு மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலயத்துக்குள் 396 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த வருடம் அக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையில் இதுதொடர்பில் 41, 914 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சந்தேக நபர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த் தடுப்புச் சட்டத்தின் 4, 5 ஆம் இலக்க சட்டவிதிகளுக்கு கீழும்,தண்டனைச் சட்டக்கோவையின் 264 ஆம் இலக்க சட்டவிதிகளுக்கு கீழும் சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
குற்றம் உறுதிச் செய்யப்படும் பட்சத்தில் நபர்களுக்கு 10,000 ரூபா அபராதம் மற்றும் ஆறு மாதகால சிறைத்தண்டனை வழங்கப்படும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பதில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார்.