உள்நாட்டு செய்தி
கெசல்கமுவ ஆற்றில் மாணிக்கல் அகழ்வில் ஈடுப்பட சென்ற ஒருவர் சட்டவிரோத மின் கம்பியில் சிக்குண்டு உயிரிழந்துள்ளார்.

கெசல்கமுவ ஆற்றில் மாணிக்கல் அகழ்வில் ஈடுப்பட சென்ற ஒருவர் அங்கு கட்டப்பட்டிருந்த சட்டவிரோத மின் கம்பியில் சிக்குண்டு உயிரிழந்துள்ளார்.
மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு சட்டவிரோத மின் கம்பியில் சிக்குண்டு உயிரிழந்துள்ளார்.
பொகவந்தலாவ தோட்ட கீழ் பிரிவைச் சேர்ந்த 46 வயதான செல்லப்பன் சங்கர் என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் தனது வீட்டுக்கு அருகில் உள்ள கெசல்கமுவ ஆற்றில் மாணிக்கல் அகழ்வில் ஈடுப்பட சிலருடன் சென்றுள்ளார்.
இதன்போது குறித்த ஒரு இடத்தில் மாணிக்ககல் அகழ்வில் ஈடுப்பட அவர் எத்தனித்துள்ளார்.
இதன்போது அங்கு மிருகங்களை வேட்டையாட அமைக்கப்பட்டிருந்த சட்டவிரோத மின் கம்பியில் சிக்குண்டு அவர் உயிரிழந்துள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதேபோல் இவ்வாறு சட்டவிரோத மின் கம்பிகளை அமைத்தவர்களை கைது செய்யவும் விசாரணைகள் இடம்பெறுவதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.