Uncategorized
பொகவந்தலாவ செல்வக்கந்தை தோட்டத்தில் 5000 நிவாரண பொதிகளை திருடிய 6 பேர் கைது
பொகவந்தலாவ செல்வக்கந்தை தோட்டத்தில் அரசாங்கத்தால் மக்களுக்காக பகிர்தளிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த உலர் உணவு பொருட்களை இரவு வேளையில் திருடிய இரு பிரதான கட்சிகளின் தோட்ட தலைவர்களை தோட்ட பொதுமக்கள் மடக்கி பிடித்து பொகவந்தலாவ பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.
செல்வக்கந்தை தோட்டத்தில் அரசாங்கத்தால் மக்களுக்காக பகிர்தளிப்பதற்காக களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த பொருட்களே இவ்வாறு திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அரசாங்கத்தால் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட இருந்து 5000 பெறுமதியான உலர் உணவு பொருட்கள் அடங்கிய பொதியே இவ்வாறு திருடப்பட்டுள்ளன.
சந்தேகத்தின் பேரில் தோட்ட மக்களின் ஒத்துழைப்புடன் அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றிரவு (27) இந்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தோட்டத்தில் உள்ள இரு பிரதான கட்சிகளின் தோட்ட தலைவர்களை இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
பொகவந்தலாவ கிராம சேவையாளர் பிரிவில் 376 பொதிகள் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு எஞ்சிய 23 பொதிகள் பொகவந்தலாவ பிரட்வேல் தோட்ட உரக் களஞ்சியசாலையில் கிராம உத்தியோகத்தால் வைக்கப்பட்டிருந்தது.
களஞ்சியசாலையின் பாதுகாப்புக்கு தொழிலாளர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் தோட்ட தலைவர்கள் சிலர் இணைந்து காவலாளியின் ஒத்துழைப்புடன் முச்சக்கர வண்டி ஒன்றில் 23 பொதிகளில் 15 பொதிகளை திருடிச் செல்லும் போது தோட்ட மக்களால் தோட்ட தலைவர்கள் ஐவரும் காவலாளியும் மடக்கி பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.