Sports
பங்களாதேஸ் அணி இலங்கையணிக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியது

பங்களாதேஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியிலும் இலங்கையணி டக்வத் லூயிஸ் விதிமுறைப்படி 103 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது.
இதற்கமைய இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரை பங்களாதேஸ் அணி 2-0 என கைப்பற்றியுள்ளது.
இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற பங்களாதேஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடி 48.1 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 246 ஓட்டங்களை பெற்றது.
இதில் முஸ்பிகுர் ரஹீம் 125 ஓட்டங்களையும், முஹமுதுல்லா 41 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
இலங்கையணியின் பந்து வீச்சில் லக்சான் சந்தகன் மற்றும் துஸ்மந்த சமீர ஆகியோர் தலா மூன்று விக்கட்டுகளை வீழ்த்தினர்.
இலங்கை அணியின் இன்னிங்ஸில் இடைக்கிடையே மழை குறுக்கீடு செய்த காரணத்தினால் போட்டியின் ஓவர்கள் குறைக்கப்பட்டது.
இதன்படி டக்வர்த் லூயிஸ் முறையில் 40 ஓவர்களில் இலங்கை 240 ஓட்டங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
எனினும், நிர்ணயிக்கப்பட்ட 40 ஓவர்களில் இலங்கை அணி 9 விக்கட்டுகளை இழந்து 141 ஓட்டங்களை மதர்திரமே பெற்றுக்கொண்டது.
இலங்கை சார்பில் துடுப்பாட்டத்டதில் தனுஸ்க குணதிலக்க 24 ஓட்டங்களையும், பெத்தும் நிசாங்க 20 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
பந்து வீச்சில் மஹதி ஹசன் மிராஸ் மற்றும் முஸ்தாவிகிர் ரஹிம் ஆகியோர் தலா மூன்று விக்கட்டுகளை வீழ்த்தினர்.
போட்டியின் ஆட்டநாயகனாக முஸ்பிகுர் ரஹீம் தெரிவானார்.
இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச போட்டி எதிர்வரும் 28 ஆம் திகதி டாக்காவிலேயே இடம்பெறவுள்ளது.