உள்நாட்டு செய்தி
ஜனாதிபதி கோட்டா குட்டி மோடி ஆகி விட்டார் – மனோ கணேசன்
தாமதிக்காது நாட்டை மூன்று வாரம் மூடி, குறைந்த வருமானம் பெறும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 20,000 ரூபா கொடுப்பனவை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று (10) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்…
“இதுவரை, ஆறு நாடுகளில் உள்ள கொரோனா கிருமிகள் இங்கே வந்து சேர்ந்துள்ளன. இப்படியே போனால், இலங்கையில் செப்டம்பர் மாதமளவில் 20,000 பேர் வரை மரணிக்கவும், தினசரி மரணம் 200 ஐ கடக்கவும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆகவே துறைமுக நகருக்கு கொடுக்கும் முன்னுரிமையை கொரோனா அழிப்புக்கு கொடுங்கள். இல்லாவிட்டால் மக்கள் தெருக்களில் செத்து மடியும் நிலைமை ஏற்படலாம்.
ஆரம்பத்தில் கொரோனாவால், வயதானவர்கள் மட்டுமே சாவார்கள் என கூறப்பட்டது. இன்று கர்ப்பிணிகள் சாகிறார்கள். குழந்தைகள் சாகிறார்கள். ஏனென்றால் கொரோனா கிருமியின் வீரியம் அதிகரித்து விட்டது..
ஆகவே நாட்டை மூடி விட்டு ஒவ்வொரு குடும்பத்துக்கும் 20,000 ரூபா நிவாரணம் வழங்குங்கள். நாட்டை மூடினால் நாளாந்த சம்பளம் பெறுவோர், சுய தொழில் செய்வோர் என எத்தனை குடும்பங்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் என கணக்கெடுங்கள்.
ஜனாதிபதி கோட்டா குட்டி மோடி ஆகி விட்டார். கோட்டாபய ராஜபக்ச, மோடியின் பெரிய தம்பி என்றால், காமினி லொகுகே சின்ன தம்பி ஆகியுள்ளார்” என்றார்.