உள்நாட்டு செய்தி
டின்சின் பகுதியில் பாரிய கல் ஒன்று சரிந்து விழுந்ததில் இளைஞர் ஒருவர் படுகாயம்

ஹட்டன் டின்சின் பகுதியில் பாரிய கல் ஒன்று சரிந்து விழுந்ததில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்து பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காபட் இட்டு செப்பனிடப்படும் ஹட்டன் – பொகவந்தலாவ பீரதான வீதியில் இன்றைய (08) தினம் டின்சின் தோட்ட பகுதியில் டோசர் வாகனத்தை பயன்படுத்தி சுத்தப்படுத்தப்பட்டது.
இவ்வாறு சுத்தப்படுத்தும் போது பாரிய கல் ஒன்று புல் வெட்டிக்கொண்டிருந்த இளைஞன் மீது புரண்டுள்ளது.
டோசர் வண்டி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் டோசர் வண்டியும் பொலிஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறினார்.
இந்த வீதியை புனரமைக்கும் பணிகளை தனியார் நிறுவனம் ஒன்று மேற்கொண்டு வருகின்றது.