உள்நாட்டு செய்தி
“இரண்டு வாரங்களுக்கு எந்த வித அரச விழாக்களையும் நடத்த கூடாது”

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் முகமாக இலங்கையில் இரண்டு வாரங்களுக்கு எந்த வித அரச விழாக்களையும் நடத்த கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தனியார் ஒன்று கூடல் கொண்டாட்டங்கள் , விழாக்கள் ஆகியவற்றுக்கும் இரண்டு வார தடை விதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதன்படி இன்று 25 முதல் அமுலுக்கு வருவதாக ஜனாதிபதி செயலகம் கூறுகிறது.