உள்நாட்டு செய்தி
இலங்கை தொடர்பில் கரிசனையுள்ளது – இந்திய வெளிவிவகார அமைச்சர்

இலங்கையில் மிக விரைவில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெசங்கர் வலியுறுத்;தியுள்ளார்.
கடந்த 23 ஆம் திகதி இந்திய மாநிலங்கள் அவையில் தி.மு.க உறுப்பினர் தம்பித்துரை இலங்கை விடயம் தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே ஜெய்சங்கர் இதனை கூறியுள்ளார்.
இந்திய அரசாங்கம் இலங்கை தமிழர்களின் உரிமைகளை நிலைநாட்ட அழுத்தம் கொடுக்க வேண்டும் என தம்பித்துரை இதன்போது கூறியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் தம்பித்துரைக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெசங்கர் இதனை தெரிவித்துள்ளார்.