உலகம்
90 வீதமான பெரியோர் கொவிட் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுயுடையவர்கள் – பைடன்
அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற ஜோ பைடன் முதல் 100 நாட்களில் 10 கோடி அமெரிக்கர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை அறிவித்தார். அதற்கான பணிகளையும் செயல்படுத்தி வருகிறார்.
அமெரிக்காவில் பைசர் , மாடர்னா மற்றும் ஜோன்சன் அண்ட் ஜோன்சன் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசி என 3 நிறுவனங்களின் தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.அமெரிக்கர்கள் அனைவருக்கும் மே மாத இறுதிக்குள் தடுப்பூசி செலுத்தப்படும் என ஜனாதிபதி ஜோ பைடன் ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இன்று முதல் 3 வாரங்கள் வரை 90 சதவீதமான பெரியவர்கள் தடுப்பூசி போட தகுதியுடையவர்கள் என அறிவிப்பதில் பெருமிதம் அடைவதாக பைடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் கொரோனா தொற்று அதிகரிக்கும் நிலை உள்ளதால் ஏப்ரல் 19ம் திகதிக்குள் அமெரிக்காவில் உள்ள அனைத்து முதியோரில் 90 வீதமானவர்கள் கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு தகுதி பெறுவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.