உலகம்
மியன்மார் பாதுகாப்பு படையினரின் தாக்குதலுக்கு சர்வதேச நாடுகள் கண்டனம்
மியன்மார் பாதுகாப்பு படையினரால் சுமார் 90 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துபபாக்கிச் சூடு மேற்கொண்டே இவ்வாறு கொலை செய்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்தவர்களில் சிறுவர்களும் அடங்குவதாக குறிப்பிடப்படுகின்றது.
வருடாந்த இராணுவ தினம் கொண்டாடவிருந்த நிலையில் அதற்கு இடையூறு ஏற்படுத்துவதாக தெரிவித்து இவ்வாறு மிலேட்சத்தனமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அமெரிக்கா, ஐக்கிய இராஜ்ஜியம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன இதனை வன்மையாக கண்டித்துள்ளன.
பெப்ரவரி முதலாம் திகதி முதல் தொடரும் போராட்டத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 400ஐ கடந்துள்ளது.