உள்நாட்டு செய்தி
எவர்க்றீனை மீட்க புதிய முயற்சி
உலகின் மிகவும் பரப்பான கப்பல் வழியான சுயெஸ் கால்வாயில் சிக்குண்டுள்ள எவர்க்றீன் கப்பலை வெளியேற்றும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
நேற்றைய தினம் மாத்திரம் 14 ட்ரக் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
குறித்த ஒரு கப்பல் இவ்வாறு சிக்குண்டிருப்பதால் 300ற்கும் மேற்பட்ட கப்பல்கள் இருப்புறங்களிலும் நீண்ட வரிசையில் நகர முடியாமல் காத்து கிடக்கின்றன.
இதேவேளை சுயெஸ் கால்வாயில் சரக்குக் கப்பல் ஒன்று சிக்குண்டிருப்பதனால் ஏற்பட்டிருக்கும் இடையூறு நாட்டின் எரிபொருள் விலையில் எவ்விதத்திலும் தாக்கம் செலுத்தாது என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துளளார்.
நேற்றைய ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் 14 நாட்களுக்குப் தேவையான எரிபொருள் நாட்டில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
என்றாலும் இந்த விபத்து காரணமாக உலகப் பொருளாதாரத்தில் பிரச்சினை ஏற்பட்டிருப்பதாகவும் மேலும் கூறினார்.