உலகம்
பல ஆண்டுகளின் பின்னர் குமுறுகிறது ஐஸ்லாந்து எரிமலை
ஐஸ்லாந்தில் சுமார் 800 ஆண்டுகளுக்கு பின்னர் முதன் முறையாகத் ஃபேக்ரதால்ஸ் ஃப்யாட்ல் எரிமலை வெடித்து தீக் குழம்பை உமிழ்ந்து வருகிறது.
நாட்டின் தெற்மேற்கு பகுதியில் இந்த எரிமலை உள்ளதுடன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னரே வெடிக்க ஆரம்பித்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை குறித்த பகுதியில் கடந்த சில வாரங்களாக 40 தடவைகள் இலேசான நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த அனர்த்தம் காரணமாக இதுவரை பொதுகமகளுக்கு எந்த ஒரு உயிராபத்தும் ஏற்படவில்லை என கூறப்படுகின்றது.அதேநேரம் பிரதேசவாசிகள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
தீப்பிழம்பும் புகையும் வெயேறுவதால் ஐஸ்லாந்து விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.