உலகம்
கொரோனா தொற்றுக்குள்ளாகி சுய தனிமைப்படுத்தலில் உள்ளார் பாக்.பிரதமர்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இரண்டு நாட்களுக்கு முன்னர் இம்ரான் கான் சீனாவின் சைனோபார்ம் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை கொரோனா தொற்று உறுதியானதையடுத்து அவர் சுய தனிமைப்படுத்தலில் உள்ளதாக பிரதமரின் சிறப்பு உதவியாளர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் துரித அதிகரிப்பு ஏற்பட்டிருந்த நிலையில் வியாழக்கிழமை தேசிய முடக்கம் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.