உலகம்
நெருக்கடியான இந்நிலையில் சிரியா மீதான தடைகள் தளர்த்தப்பட வேண்டும் என இந்தியா வலியுறுத்தல்.
கொரோனா பாதிப்பு மக்களிடையே மனிதாபிமானத்தை வெகுவாக கேள்விக்குள்ளதாக இந்தியா குறிப்பிட்டுள்ளது.
இந்த நெருக்கடியான நிலையில் சிரிய மக்களுக்கு உதவும் வகையில் அந்நாடு மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளைத் தளர்த்த வேண்டும் என்றும் ஐநா பாதுகாப்பு பேரவையிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதியான டி.எஸ்.திருமூர்த்தி சிரியா மற்றும் அங்கு இடம்பெற்றுவரும் போர் தொடர்பான மாநாட்டில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
போர் முடிவுக்கு வருவதற்கான எந்த சாத்தியங்களும் தென்படவில்லை என தெரிவித்த அவர் இத்தனை ஆண்டுகால போரில் அந்நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில் மக்களின் இந்த நெருக்கடி நிலையை மேலும் பல மடங்காக கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாகவும், இந்நாட்டு மக்களுக்கு சர்வதேச நாடுகள் இணைந்து உதவிக்கரம் நீட்ட வேண்டிய தருணம் இதுவென்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.