உலகம்
பத்திரிகையாளரின் கேள்வியால் மீண்டும் ஆத்திரமடைந்தார் தாய்லாந்து பிரதமர்.
கேள்வி கேட்டதால் கோபமடைந்த தாய்லாந்து பிரதமர் பிரயூத் சான் ஓச்சா பத்திரிகையாளர்கள் மீது செனிடைசரை விசிறியுள்ளார்.
பிரதமரின் இந்த செயற்பாடு அனைவர் மத்தியிலும் கடும் கண்டனத்திற்கு உட்பட்டு வருகின்றது.
7 வருடங்களுக்கு முன்பு நடந்தபோராட்டத்தில் ஏற்பட்ட கிளர்ச்சிக்காக 3 அமைச்சர்கள் கடந்த வாரம் கைது செய்யப்பட்டனர். எனவே வெற்றிடம் ஏற்பட்ட அமைச்சுப் பதவிகள் எப்போது நிரப்பப்படும் என்று பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பிய போதே பிரதமர் இவ்வாறு நடந்துக்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தொடர்ச்சியாக கேள்வி கேட்கும் பத்திரிகையாளர்கள் மீது பிரதமர் தமது ஆத்திரத்தை வெளிப்படுத்திய முதலாவது சந்தர்ப்பம் இதுவல்ல.
பதிலளிக்க முடியாத வகையில் கேள்வி கேட்கும் பத்திரிகையாளர்களை தலையில் தட்டுவது, காதைப் பிடித்து இழுப்பது ,பத்திரிகை யாளர்கள் சந்திப்பில் தனது கட்அவுட்டை வைத்து விட்டு வெளியேறுவது போன்ற சர்ச்சைக்குரிய செயல்களில் அவர் ஏற்கெனவே ஈடுபட்டுள்ளார்.