உள்நாட்டு செய்தி
அதிவேக வீதிகளில் வருமானம் 25 % அதிகரிப்பு !

அதிவேக வீதிகளில் வருமானம் 25 % அதிகரித்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
நேற்று (11) மாத்திரம் அதிவேக வீதிகளில் 1,28,000 வாகனங்கள் பயணித்துள்ளதாக அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பிரியந்த சூரியபண்டார தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் நேற்று 46 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது வழமையான நாளொன்றின் வருமானத்துடன் ஒப்பிடுகையில், 25% அதிகரிப்பு எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்து வரும் இரண்டு நாட்களில் அதிவேக வீதிகளின் வருமானம் 60% ஆக அதிகரிக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்