உள்நாட்டு செய்தி
பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் சந்தேகநபர் ஒருவர் உயிரிழப்பு
பாதுக்க பகுதியிலுள்ள வீதித்தடையொன்றில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் சந்தேகநபரொருவர் உயிரிழந்துள்ளார்.
மொரகஹஹேன பகுதியில் நேற்று(07) இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுசம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரியே இந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர், சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் பொலிஸாரும் இணைந்து இன்று(08) காலை குறித்த பகுதியில் வீதித்தடையை ஏற்படுத்தி வாகனங்களை சோதனையிட்டுள்ளனர். இதன்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை சோதனையிட்ட போது, குறித்த நபர் பொலிஸார் மீது துப்பாக்கிச்சூடு நடத்த முயற்சித்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார். பாதுகாப்பு பிரிவில் பணிபுரியும் 33 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சடலம் பாதுக்க வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.