உள்நாட்டு செய்தி
கடலில் வீசப்பட்ட 10 கிலோ தங்கம் – மூவர் கைது
இலங்கையிலிருந்து கடத்தப்பட்ட 10 கிலோகிராம் எடையுடைய தங்கக் கட்டிகளை கடலில் வீசிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இராமேஸ்வரம் அருகே கடலுக்குள் வீசப்பட்ட தங்கக் கட்டிகளை சுழியோடிகளினதும் முத்துக்குளிப்பவர்களினதும் உதவியுடன் அதிகாரிகள் தேடி வருவதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.இலங்கையிலிருந்து சுமார் 10 கிலோகிராம் தங்கத்தை படகு மூலம் மூவர் கடத்தி வருவதாக மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு நேற்று முன்தினம் (04) தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, மண்டபம் பகுதியில் இடம்பெற்ற தீவிர ரோந்துப் பணியின் போது, சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் குறித்த தங்கம் கடலில் வீசப்பட்டுள்ளமை தெரியவந்ததாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.கடல்வழி தங்கக் கடத்தலை தடுக்க ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.