உள்நாட்டு செய்தி
பாடத்திட்டத்தை நவீன மயமாக்கும் முன்னோடித் திட்டம் ஆரம்பம்
பாடசாலை பாடத்திட்டத்தை நவீனமயமாக்குவதற்கான முன்னோடித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய கல்வி நிறுவகம் தெரிவித்துள்ளது.57 ஆரம்ப பாடசாலைகளிலும் 113 இடைநிலைப் பாடசாலைகளிலும் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் பிரசாத் சேதுங்க தெரிவித்துள்ளார்.பாடசாலைகளில் தரம் 1, தரம் 6 மற்றும் தரம் 10-க்கான பாடத்திட்டமே நவீனமயமாக்கப்படவுள்ளது. அடுத்த ஆண்டு முதல் நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் பாடத்திட்டம் நவீனமயமாக்கப்படவுள்ளது.பாரம்பரிய கற்பித்தல் முறையில் இருந்து விலகி மாணவர்களை மையமாகக் கொண்ட கல்வி முறையை உருவாக்குவதே பாடத்திட்ட நவீனமயமாக்கலின் நோக்கம் ஆகும். புதிய பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதன் மூலம் பரீட்சைக்காக கற்றல் எனும் மனப்பான்மையை மாணவர்களிடமிருந்து நீக்கி, புத்தாக்க சிந்தனை கொண்ட மாணவர் சமுதாயத்தை உருவாக்க முடியுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.