உள்நாட்டு செய்தி
பாடசாலை மாணவர்களுக்கு ஜப்பானில் இருந்து சைக்கிள்கள் !
தொலைதூரப் பிரதேசங்களில் உள்ள பாடசாலை மாணவர்களின் தினசரி வருகையை ஊக்குவிக்கும் நோக்கில், ஜப்பானிய ‘சைல்ட்ஃபண்ட்’ அமைப்பு, இலங்கைக்கு 500 துவிச்சக்கர வண்டிகளை மானியமாக வழங்கியுள்ளது.
சுசில் பிரேமஜயந்தவின் தலைமையில், பத்தரமுல்லையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் , ஜப்பானிய ‘Childfund’ நிறுவனத்தின் பிரதிநிதி மற்றும் இலங்கை ‘Childfund’ நிறுவனத்தின் தேசிய பணிப்பாளர் அதிதி கோஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஏற்கனவே மொனராகலை, புத்தளம், முல்லைத்தீவு போன்ற போக்குவரத்துச் சிரமங்கள் உள்ள 12 மாவட்டங்களில் உள்ள 108 பாடசாலைகளில் இருந்து 12-16 வயதுக்குட்பட்ட பொருத்தமான மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். வீட்டில் இருந்து பாடசாலைக்கு குறைந்தபட்சம் இரண்டரை கிலோமீட்டர் தூரம் இருக்க வேண்டும் என்பது இந்த சைக்கிள்களை வழங்குவதில் முக்கிய நிபந்தனையாக கருதப்பட்டது. இலங்கை ‘Childfund” வேண்டுகோளுக்கு இணங்க இந்த சைக்கிள்கள் பெறப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது