உள்நாட்டு செய்தி
நுவரெலியாவில் பாரிய தீ விபத்து
நுவரெலியா நகரில் பாரிய தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. நகரின் பிரதான பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் இன்று(31) பிற்பகல் இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், பொலிஸார், நுவரெலியா நகரசபைய தீயணைப்புப் பிரிவு மற்றும் பொதுமக்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
இந்த தீப்பரவல் காரணமாக உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வழக்கம் போல உணவகத்தில் சமையல் வேலை செய்து கொண்டிருக்கும் போது சமையலறையில் இருந்து புகை மற்றும் வெப்பத்தை அகற்றும் மின் விசிறியில் ஏற்பட்ட மின் கசிவால் குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்த தீ விபத்து தொடர்பில் நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.