உள்நாட்டு செய்தி
“எங்கள் மூக்கை நாங்களே வெட்டி அகற்ற முடியாது”: ஜெனிவா குறித்து சுமந்திரன் கூறியது

ஐ.நா மனித உரிமைகளண் பேரவையில் பொறுப்பு கூறல் விடயம் என்பது சாத்தியமாகாத ஒன்று என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழரசு கட்சியின் மகளீர் தின நிகழ்வு கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் இன்று (07) இடம்பெற்றது
குறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், எஸ். சிறிதரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் சாதனை பெண்கள் கௌரவிக்கப்பட்டனர்.
குறித்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் ஜெனிவா தீர்மானம் தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்தார்..
“பொறுப்பு கூறல் விடயத்தை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இருந்து வெளி எடுக்க வேண்டும். ஆனால் பாதுகாப்புச் சபை தீர்மானத்தின் ஊடாக மாத்திரமே குற்றவியல் நீதிமன்றத்திற்கு இலங்கை விடயத்தை கொண்டுச் செல்ல முடியும். ஆகவேதான் பொறுப்பு கூறல் விடயம் என்பது சாத்தியமாகாத ஒன்றாக தென்படுகின்றது. ஆனாலும் கேட்காமல் இருக்க முடியாது. ஆகவே எங்கள் மூக்கை நாங்களே வெட்டி அகற்ற முடியாது. பிரேரணை தோற்கடிக்கப்பட்டால் நிலைமை பாராதுரமாகும்.” என்றார்.