உள்நாட்டு செய்தி
பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட சுற்றிவளைப்பு !
பண்டிகை காலத்தை முன்னிட்டு இலங்கை பொது சுகாதார பரிசோதகர்களால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.இதற்காக சுமார் 1,500 உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.நாட்டிலுள்ள 365 சுகாதார வைத்திய பிரிவுகளையும் உள்ளடக்கும் வகையில் இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்படுவதாக சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் இதன்போது பரிசோதிக்கப்படவுள்ளன. உணவு பதப்படுத்தும் நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் தொற்றுநோயால் பாதிக்கப்படவில்லை என்ற மருத்துவ அறிக்கையை வைத்திருப்பது கட்டாயம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.