Connect with us

Sports

2-வது வெற்றியை பதிவு செய்தது CSK

Published

on

குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 63 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றிபெற்று ஐ.பி.எல். தொடரின் தனது 2-வது வெற்றியை பதிவு செய்தது.

நேற்று இன்று இரவு சென்னையில் நடைபெற்ற போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின.

இதில் நாணயசுழற்சியில் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்தது.

குஜராத் அணியின் சார்பில் அதிகபட்சமாக ரஷித் கான் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பதிலுக்கு 207 என்ற வெற்றி இலக்குடன் துடுப்பெடுத்தாடிய குஜராத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் மட்டுமே எடுத்தது.

சென்னை அணியின் சார்பில் அதிகபட்சமாக தீபக் சாகர், தேஷ் பாண்டே மற்றும் ரஹ்மான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், பத்திரன மற்றும் டேரில் மிட்செல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தியிருந்தனர்.

ஐபிஎல் 16ஆவது தொடரின் இறுதி போட்டியில் களம் கண்ட இரு அணிகளும் இன்றைய ஐபிஎல் 2024 தொடரின் 7ஆவது போட்டியில் பலப்பரீட்சை நடத்தவுள்ளமை ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

2023 தொடரின் இறுதி போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணியை வீழ்த்தி சென்னை அணி மகுடம் சூட்டிக்கொண்ட பின்னர் இரு அணிகளும் சிதம்பரம் மைதானத்தில் இன்று மோதவுள்ளன.

இளம் தலைமையை கொண்ட சென்னை அணியானது இன்றய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

நாணயசுழட்சியில் வென்ற குஜராத் அணி களத்தடுப்பை தேர்வு செய்துள்ளது. இரு அணிகளும் ஒவ்வொரு வெற்றியுடன் புள்ளிபட்டியலில் நிலைத்திருக்க இரண்டாவது வெற்றி யாருக்கு என தீர்மானிக்கும் போட்டியாக இன்றைய போட்டி அமைந்துள்ளது.

நடப்பு சாம்பியன் சென்னை அணி தனது தொடக்க ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை சொந்த மைதானத்தில் வீழ்த்தியது.

சுபமான கில் தலைமையிலான குஜராத் அணியும் தனது சொந்த மண்ணில் நடந்த முதலாவது ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை அணியை 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிப்பெற்றது.

இரு அணிகளுமே பலமான அணிகளாக பாரக்கப்படுவதால் இந்த போட்டியானது விறுவிறுப்பு பஞ்சம் இல்லாமல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்விரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் குஜராத் அணி 3 முறையும், சென்னை அணி 2 முறையும் வென்றுள்ளன.

எனினும் சேப்பாக்கம் மைதானத்தின் தன்மையை நன்கு அறிந்த தமிழக வீரர்களான சாய் சுதர்சன், விஜய் சங்கர், சாய் கிஷோர் ஆகியோர் குஜராத் அணியில் அங்கம் வகிப்பது அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கும் என கூறப்படுகின்றது