உள்நாட்டு செய்தி
போதைப்பொருளுடன் வெளிநாட்டுவர் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கொக்கேய்ன் என சந்தேகிக்கப்படும் ஒரு தொகை போதைப்பொருளுடன் வெளிநாட்டு பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேகநபர் பிரேசிலில் இருந்து டுபாய் ஊடாக இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். அதன்போது, சுங்க போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளினால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேகநபர் வெனிசூலா நாட்டைச் சேர்ந்த 41 வயதுடைய ஒருவரென தெரியவந்துள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.