உள்நாட்டு செய்தி
மொரட்டுவை பகுதியில் பெண்ணொருவர் கழுத்தறுத்து கொலை
மொரட்டுவை, இந்திபெத்த பெக்வத்த பகுதியில் பெண்ணொருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
50 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலையை செய்த நபர் மொரட்டுமுல்ல பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் சில மாதங்களுக்கு முன்னர் சிறையில் இருந்த போது மர்மமான முறையில் உயிரிழந்திருந்தார்.
உயிரிழந்த கணவரின் உறவினர் ஒருவரால் இந்த கொலை இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.