உள்நாட்டு செய்தி
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை
வெலிகம மிரிஸ்ஸ கடற்கரைப்பகுதிக்கு அருகில் ஒருவர் கூரிய ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.
மிரிஸ்ஸ பரகல்ல பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய விருந்தக உரிமையாளர் ஒருவரே இன்று முற்பகல் இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடற்கரைக்கு அருகில் உள்ள மரமொன்றை வெட்டுவது தொடர்பில் விருந்தக உரிமையாளர்கள் இருவருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில், குறித்த விருந்தக உரிமையாளர்களில் ஒருவரே இந்த கொலையை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.