உள்நாட்டு செய்தி
பொலிஸ்மா அதிபர் தலைமையில் விசேட சோதனை…!
பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தலைமையில் இன்று அதிகாலை விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வெல்லம்பிட்டி, களுபாலம, சேதவத்தை உள்ளிட்ட பகுதிகளில் இந்த விசேட நடவடிக்கை இடம்பெற்றிருந்தது.
அதன்போது, போதைப்பொருள் கடத்தல் மற்றும் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 30 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.