Connect with us

உள்நாட்டு செய்தி

பெரிய வெங்காயம் விலை உயரக்கூடும் 

Published

on

பெரிய வெங்காய ஏற்றுமதிக்கு பாகிஸ்தான் தடை விதித்தால் புத்தாண்டு பண்டிகையின் போது ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை 700 அல்லது 800 ரூபாவாக விலை உயரக்கூடும்  எனவும் பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கத்தின் தலையீடு தேவை எனவும் கொழும்பில் உள்ள பெரிய வெங்காய இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பெரிய வெங்காயத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், அடுத்த வாரத்திற்குள் இலங்கையும் அதனை எதிர்கொள்ள நேரிடும் எனக் கூறி வளைகுடா பகுதிக்கான ஏற்றுமதியை பாகிஸ்தான் நிறுத்தியுள்ளதாக இந்நாட்டின் பெரிய வெங்காய இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் மலிவானது என்றும், தூதரக தலையீட்டின் கீழ், பெரிய வெங்காயம் தற்போது துபாய் மற்றும் பங்களாதேஷுக்கு மட்டுமே ஒதுக்கீட்டு முறையில் ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *