உள்நாட்டு செய்தி
சொத்துக்கள், பொறுப்புகளை வெளியிடும் சட்டத்தில் திருத்தம்!
சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை வெளிப்படுத்துதல் தொடர்பான சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்திற்கு அமைவாக தங்கள் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை வெளிப்படுத்த வேண்டிய நபர்கள் மற்றும் அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.2023 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின்படி, இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுளை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவினால் வழிகாட்டுதல்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட மாதிரி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதுடன் அதனை ஆணைக்குழுவின் இணையத்தளத்திலிருந்து (www.ciaboc.gov.lk) பதிவிறக்கம் செய்ய முடியும் என்றும் ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.