உள்நாட்டு செய்தி
அவசர சிகிச்சைப்பிரிவில் எம்.கே. சிவாஜிலிங்கம்!
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான எம்.கே.சிவாஜிலிங்கம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று (02) ஏற்பட்ட திடீர் உடல் நலக்குறைவால் சென்னை வடபழனி விஜயா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அவருக்கு எதிரான வழக்கொன்றிற்காக நேற்று முன்தினம் கொழும்புக்கு வருகைத்தந்த நிலையில் வழக்கு முடிவடைந்தும் அவர் நேற்று காலை சென்னைக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது