உள்நாட்டு செய்தி
ஆசிரியர் தாக்கியதில் 3 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி..!
பாடசாலை ஒன்றில் மாணவர்களை ஆசிரியர் தடியால் தாக்கியதில் 3 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.குறித்த மூன்று மாணவர்கள் உட்பட 7 மாணவர்கள் பாடசாலையின் சிற்றுண்டிச்சாலைக்குச் சென்றிருந்த வேளையில் குறித்த மாணவர்களின் வகுப்பாசிரியர் இவர்களை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மாணவர்கள் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.இந்தநிலையில் சம்பவம் தொடர்பில் பாதுக்க பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.