உள்நாட்டு செய்தி
பாடசாலை மாணவர்களின் பைகள் தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பு
பாடசாலை மாணவர்களின் பைகளின் எடையைக் குறைப்பது குறித்து கல்வி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் வசந்த பெரேரா தெரிவித்துள்ளார்.இது மாணவர்களுக்கு முதுகுத் தண்டு ஒழுங்கீனம் அல்லது ஏனைய பிரச்சினைகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.மாணவர்கள் அதிக எடையுள்ள பாடசாலை பைகளை எடுத்துச் செல்வதால் அவர்களுக்கு முதுகுத் தண்டு ஒழுங்கீனம் அல்லது பிற பிரச்சினைகள் ஏற்படலாம் என சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியதை அடுத்து அது தொடர்பில் அவதானம் செலுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.பாடசாலை பைகளின் எடையைக் குறைப்பதற்கான முதல் படியாக, பாடப்புத்தகங்களை தொகுப்பாக அச்சிட அமைச்சு தீர்மானித்துள்ளது.அந்தந்த பாடசாலை தலைமையாசிரியர்களின் நேரடிக் கண்காணிப்பில் பாடப்புத்தகங்களைத் தவிர பாடசாலை மாணவர்கள் தங்கள் பணிப்புத்தகங்களை மட்டும் கொண்டு வர அனுமதிப்பது மாற்று முடிவாக இருக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.